தலைமறைவாக இருந்த குற்றவாளியை சுட்டுக்கொன்ற அமெரிக்க காவல்துறை: பரிதாபமாக உயிரிழந்த போலீஸ் மோப்ப நாய்
அமெரிக்காவில் மோப்ப நாயின் உதவியுடன் தலைமறைவாக இருந்த பாலியல் குற்றவாளியை அந்நாட்டு காவல்துறை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காவலர்களுக்கு பெரிதும் உதவிய மோப்ப நாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
தலைமறைவான பாலியல் குற்றவாளி
அமெரிக்காவில் வசிக்கும் ஜானி ரே 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, கொள்ளையடிப்பது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக சிறை தண்டனை பெற்றிருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமின் கிடைத்ததும் தலைமரைவாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த அமெரிக்க காவல் துறையினர் அவர்களது மோப்ப நாயின் உதவியால் ஜான் ரே தலைமறைவாக வாழ்ந்து வந்த இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அமெரிக்க காவல் துறைஇடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார்.
பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்ட மோப்ப நாய்
இந்த சம்பவத்தின் போது போலீசாரை சரமாரியாக சுட முயற்சி செய்த ஜான் ரே-வை திறமையாக கட்டுப்படுத்தி மீண்டும் கைது செய்தனர் காவலர்கள்.
PA
இந்த நிகழ்வின் போது காயமடைந்த அமெரிக்க காவல்துறையின் மோப்ப நாய் காயமடைந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மோப்ப நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தற்போது சமூக வலைதளங்களில் இதுகுறித்த செய்திகள் வெளியாகி இந்த சம்பவம் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.