பயத்தில் அன்று ஆப்பிள் பங்குகளை விற்ற நபர்... இன்று அதன் மதிப்பு ரூ 26.3 லட்சம் கோடி
முதலீட்டிற்கான சிறந்த சூத்திரம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக லாபம் கிடைக்கும் என்பதே.
நெருக்கமான நண்பர்
மொத்தமாக இழக்க நேரிடும் என்ற பயத்தில் நபரொருவர் ஆப்பில் நிறுவனத்தில் தமக்கு சொந்தமான 10 சதவீத பங்குகளை விற்றுள்ளார். 49 வருடங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தில், அந்த 10 சதவீத பங்குகளின் தற்போதைய மதிப்பு ரூ 26.3 லட்சம் கோடி என்றே கூறுகின்றனர்.
ரொனால்ட் வெய்ன் என்பவர் ஆப்பிள் நிறுவனர்களான ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரின் நண்பர். அந்த நிறுவனம் நிறுவப்பட முதன்மையான பங்காற்றியுள்ளார்.
Atari நிறுவனத்தில் அப்போது பணியாற்றி வந்துள்ள ரொனால்ட் வெய்ன், ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவின் மிகவும் நெருக்கமான நண்பர் மட்டுமின்றி, அவர்களுக்கு ஒரு மதிப்புமிக்க ஆலோசகராகவும் இருந்தார்.
ரொனால்ட் வெய்ன் மிகவும் புத்திசாலி என்பதை ஜாப்ஸ் அறிந்திருந்தார், எனவே ஆப்பிளை ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யும் அனைத்துப் பணிகளையும் அவரிடம் ஒப்படைத்தார்.
நிறுவன ஒப்பந்தத்தை உருவாக்கி, அனைத்து சட்ட ஆவணங்களையும் தயாரித்து, தேவையான அனைத்து சம்பிரதாயங்களையும் பூர்த்தி செய்தவர் ரொனால்ட் வெய்ன் தான்.
இந்தப் பங்களிப்புக்கு ஈடாக, ஸ்டீவ் ஜாப்ஸ் அவருக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை வழங்கினார். இதனால், ஜாப்ஸ் மற்றும் வோஸ்னியாக் இருவரும் தலா 45 சதவீத பங்குகளைப் பெற்றனர்.
இழப்பு ஏற்பட்டால்
ஆனால், ஆப்பிள் நிறுவப்பட்ட 12 நாட்களிலேயே ரொனால்ட் வெய்ன் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்ததுடன், தம்மிடம் இருந்த 10 சதவீத பங்குகளை வெறும் 800 அமெரிக்க டொலருக்கு விற்றுவிட்டார்.
உண்மையில் ஆப்பிள் நிறுவனம் அப்போது கடனில் தத்தளிக்க, அதில் இருந்து அந்த நிறுவனத்தை மீட்கவே ரொனால்ட் வெய்ன் தமது பங்குகளை விற்றார். ஸ்டீவ் ஜாப்ஸ் அப்போது 50 கணினிகள் வாங்கும் பொருட்டு 15,000 அமெரிக்க டொலர் கடனாக வாங்கியிருந்தார்.
இந்த நிலையில், எதிர்பார்த்த வருவாய் கிட்டாமல் போனால், அந்த 15,000 டொலர் கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது என்ற பயத்திலேயே தம்மிடம் இருந்த பங்குகளை விற்றதாக 2017ல் ரொனால்ட் வெய்ன் தெரிவித்திருந்தார்.
ஏனென்றால், தமது நண்பர்கள் இருவரிடமும் சுத்தமாக பணமில்லை, இழப்பு ஏற்பட்டால் அது தம்மை பாதிக்கும் என்று அவர் கணித்துள்ளார். அன்று அவர் 800 டொலருக்கு விற்காமல் இருந்திருந்தால், இன்று அதன் மதிப்பு 300 பில்லியன் டொலராக இருந்திருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தோராயமாக 3 டிரில்லியன் அமெரிக்க சொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |