ரூ.25,000-க்கு TVS moped வாங்கியதை கொண்டாட ரூ.60,000 செலவு செய்த டீக்கடைக்காரர்
புதியதாக டி.வி.எஸ். மொபெட் வண்டியை வாங்கியதை கொண்டாடுவதற்கு டீக்கடைக்காரர் ஒருவர் ரூ.60,000 செலவு செய்துள்ளார்.
ரூ.60,000 செலவு
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், ஷிவ்புரி பகுதியைச் சேர்ந்தவர் குஷ்வாகா. இவர், தேநீர் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், தன்னுடைய தேவைக்காக டி.வி.எஸ். மொபெட் (TVS moped) வண்டியை வாங்கியுள்ளார்.
அதனை வாங்கிவிட்டு ஷோரூமில் இருந்து வீட்டிற்கு கொண்டு வருவதற்காக அவர் செய்த விடயங்கள் தான் தற்போது பேசப்பட்டு வருகிறது.
இவர், டி.வி.எஸ். மொபெட் வண்டியை 25,000 ரூபாய் முன்பணம் கொடுத்து பதிவு செய்துள்ளார். மீதமுள்ள பணத்தை தவணை முறையில் கட்டுவதாக கூறி வாங்கி வந்துள்ளார்.
தான் வாங்கிய வண்டியை வீட்டிற்கு கொண்டு வருவதற்காக ரூ.60000 செலவு செய்துள்ளார். அதாவது, வண்டியை ஷோரூமில் இருந்து எடுத்து வருவதற்காக வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.
அதற்காக, வீட்டில் டி.ஜே தயார் செய்து, ஆட்டம் பாட்டம் என தனது உறவினர்களுடன் ஷோரூமிற்கு சென்றுள்ளார். மேலும், அங்கிருந்து வண்டியை கொண்டு வர ஜே.சி.பி.-ஐ வாடகைக்கு எடுத்துள்ளார்.
பின்னர், அதில் வண்டியை ஏற்றி டிஜே போட்டு ஆட்டம் போட்டுக்கொண்ட ஊர்வலமாக எடுத்து வந்துள்ளார். இந்த விடயம் தான் அந்த பகுதியில் தற்போது பேசப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |