தவறான முடிவால்... 33 ஆண்டுகள் சிறையில் கழித்த நபர்: கடைசியில் ஏற்பட்ட திருப்பம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 33 ஆண்டுகள் சிறையில் கழித்த நபர் ஒருவரை, நிரபராதி என அறிவித்து மாவட்ட நீதிமன்றம் விடுவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம்
கடந்த 1990ம் ஆண்டு கலிபோர்னியாவின் பால்ட்வின் பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கொலை முயற்சி குற்றத்திற்காக 33 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் டேனியல் சல்டானா.
@AP
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தால் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது 55 வயதாகும் சல்டானா இறுதியாக தாம் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்ததோடு, அவர் எதிர்கொண்ட சிரமங்களையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் நிரபராதி என தெரிந்திருந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கொடுமை என சல்டானா குறிப்பிட்டுள்ளார். கடைசியில் தாம் நிரபராதி என நிரூபிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
1990ல் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கியால் தாக்கியதாக கூறி ஆறு பிரிவுகளில் சல்டானா மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. 6 பாடசாலை மாணவர்கள் மீது தவறுதலாக இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவே கூறப்பட்டது.
45 ஆண்டுகள் சிறை தண்டனை
சம்பவம் நடக்கும் போது 22 வயதான சல்டானா, கட்டுமான பணியாளராக செயல்பட்டு வந்துள்ளார். அவருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், 2017ல் பரோல் கோரியுள்ள விசாரணையின் போது, இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்க இன்னொருவர், இந்த வழக்கில் சல்டானா நிரபராதி என்பதை குறிப்பிட்டுள்ளார்.
@AP
ஆனால் இந்த முக்கியமான தகவல், சல்டானா அல்லது அவரது தரப்பு சட்டத்தரணிகளிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் மேலும் 6 ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சல்டானா நிரபராதி என்பதை நீதித்துறை உறுதி செய்ததுடன், அவரை விடுவிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுத்தது.
இதனையடுத்து, மாவட்ட சட்டத்தரணி ஜார்ஜ் கேஸ்கான், சல்டானா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் அதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.