குட்கா துப்பிய முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மத்தியப் பிரதேசத்தில் குட்கா துப்பிய முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளர்.
குட்கா துப்பிய முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோடாவை சேர்ந்த 65 வயதான பிரபுலால் குப்தா, காயத்ரி நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
குட்கா மேலும் பழக்கமுடைய பிரபுலால் குப்தா, தனது மூன்றாவது மாடி பால்கனியிலிருந்து குட்காவை மென்று துப்பியுள்ளார்.

அவர் துப்பிய எச்சிலானது, பால்கனிக்கு மிக அருகே சென்ற 11,000 வோல்ட் (11kV) உயர் அழுத்தக் கம்பி மீது பட்டு அவருக்குப் பலத்த மின் அதிர்ச்சி ஏற்பட்டு, அவர் அங்கேயே உயிரிழந்தார்.
மனித உமிழ்நீரில் ஈரப்பதத்துடன், உப்புகள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளும் உள்ளன. இந்தக் கலவை மின்சாரத்தை மிகச் சிறப்பாகக் கடத்தும் ஒரு பொருளாகச் செயல்படுகிறது.
தொடர்ச்சியாக வடியும் உமிழ்நீர் நேரடிக் கம்பியைத் தொடும்போது, மின்சாரம் அந்த நபரிடம் திரும்பிப் பாய்வதற்கு அது ஒரு நேரடிப் பாதையை உருவாக்குகிறது.
11kV போன்ற உயர் அழுத்தக் கம்பிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஏதேனும் கடத்தி அல்லது ஈரப்பதம் அவற்றின் அருகில் வந்தால், மின்சாரம் காற்றில் பாய்ந்து செல்லக்கூடும்.
தங்கள் வீடுகளுக்கு மிக அருகில் அபாயகரமாகச் செல்லும் 11kV மின்கம்பிகளை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பலமுறை மின்சார துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொத்தனாராக பணியாற்றி வரும் பிரபுலால் குப்தா, கடந்த 10 ஆண்டுகளாக பத்மா சிதரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கண்ணீர் விட்டு அழுத வீட்டு உரிமையாளர் பத்மா சிதர், "எங்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள மின் கம்பங்களும் மின் கம்பிகளும் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளன. எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே அமைந்துள்ள உயர் அழுத்த மின் கம்பியை அகற்றுமாறு அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம்.
அதை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதியளித்தனர், ஆனால் பின்னர் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டனர். மின்சார துறையின் அப்பட்டமான பொறுப்பற்ற தன்மையே இந்த மரணத்திற்குக் காரணம்" என தெரிவித்துள்ளார்.