இங்கிலாந்தில் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட நபர்: அடையாளம் தெரிந்தது
இங்கிலாந்தில், சனிக்கிழமையன்று கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட நபரின் அடையாளம் தெரியவந்துள்ள நிலையில், அவரைக் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட நபர்
இங்கிலாந்திலுள்ள Twickenham என்னுமிடத்தில், சனிக்கிழமை இரவு 11.40 மணியளவில் ஒருவர் காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசாரும் அவசர உதவிக்குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அவரைக் காப்பாற்ற மருத்துவ உதவிக்குழுவினர் எடுத்த முயற்சி பலனளிக்காமல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்கள் இந்நிலையில், அவரது பெயர் ஹர்பால் சிங் ரூப்ரா (38) என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரூப்ராவை தாக்கிய, அதே பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் லூக்கா (45) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |