மின்னல் தாக்கி சுருண்டு விழுந்த நபர்., தெறித்து ஓடிய நாய்கள்: வெளியான பதறவைக்கும் சிசிடிவி காட்சி
அமெரிக்காவில் ஒரு நபர் தனது மூன்று நாய்களுடன் நடந்து சென்றபோது மின்னல் தாக்கி விழுந்த பிறகு, வழிப்போக்கர்கள் சரியான நேரத்திற்கு வந்து அவரது உயிரை காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
அலெக்ஸ் கோரியாஸ் (Alex Coreas) எனும் அந்த இளைஞர், கடந்த அக்டோபர் 3-ஆம் திகதி டெக்சாஸில் உள்ள ஸ்டூப்னர் ஏர்லைன் கால்நடை மருத்துவமனைக்கு வெளியே தனது மூன்று நாய்களுடன் நடந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது.
மின்னலின் தாக்கம் கோரியாஸின் காலணிகள் மற்றும் காலுறைகள் கூட வெடித்து சிதறியுள்ளது.
கோரியாஸின் இதயத்துடிப்பு நின்று உடனடியாக சுயநினைவை இழந்து தரையில் பொத்தென விழுந்தார்.
இச்சம்பவத்தை படம்பிடித்த கண்காணிப்பு கேமராவில், அந்த நபரின் கால்களுக்கு அருகில் மின்னல் தரையில் படுவதைக் காட்டியது.
கோரியாஸ் விழுந்த சில நிமிடங்களில் அவரை நோக்கி ஒரு நபர் ஓடுவதையும், பின்னர் மேலும் சிலர் அவருக்கு மருத்துவ உதவியை வழங்கியதும் வீடியோ[வில் பதிவானது.
அதில் ஒரு நபர் CPR கொடுத்து அவரது மூச்சை வரவழைத்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கொரியாஸ் தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வரும் நிலையில், அவரது நாய்கள் பின்னர் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.