நேரத்தை வீணாக்கியதாக பிரபல திரையரங்கம் மீது வழக்குத் தொடர்ந்த நபர்: நீதிமன்றம் அதிரடி
பெங்களூருவில் திரைப்படம் பார்க்கச் சென்ற ஒருவர், குறிப்பிட்ட திரையரங்கத்தில் திரைப்படம் துவங்கும் முன் எக்கச்சக்கமான விளம்பரங்கள் திரையிடப்பட்டதால் பொறுமையிழந்தார்.
அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய, நீதிமன்றம் அதிரடி தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
பிரபல திரையரங்கம் மீது வழக்குத் தொடர்ந்த நபர்
பெங்களூருவில், PVR Inox நிறுவனத்துக்குச் சொந்தமான திரையரங்கம் ஒன்றிற்கு திரைப்படம் ஒன்றைக் காணச் சென்றுள்ளார் அபிஷேக் என்பவர்.
மணி 4.05க்கு திரைப்படம் துவங்கவேண்டிய நிலையில், தொடர்ச்சியாக விளம்பரங்கள் திரையிடப்பட்டுள்ளன. பின்னர் மணி 4.28க்குதான் திரைப்படம் துவங்கியுள்ளது.
திரைப்படம் முடிய தாமதமானதால் விரக்தியடைந்த அபிஷேக், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
திரைப்படம் முடிய தாமதமானதால் தான் பங்கேற்கவேண்டிய முக்கிய நிகழ்ச்சிகளில் தன்னால் பங்கேற்க இயலவில்லை என்றும், திரையரங்கம் திரைப்படம் துவங்கும் நேரம் குறித்து தவறாக விளம்பரம் செய்துள்ளதாகவும், விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்க்காக நுகர்வோரின் உரிமைகளை மீறுவதாகவும் தெரிவித்துள்ளார் அபிஷேக்.
அவர் சமர்ப்பித்த ஆதாரங்களை ஆராய்ந்ததில் அவர் கூறியது உண்மைதான் என்பதை அறிந்துகொண்ட நுகர்வோர் நீதிமன்றம், அபிஷேக்குக்கு இழப்பீடாக 20,000 ரூபாயும், வழக்கு செலவுக்காக 8,000 ரூபாயும் வழங்க வேண்டும் என PVR Inox நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், நுகர்வோர் நல நிதிக்காக PVR Cinemas நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |