மணமுடித்த 2 தங்கைகள்! எனக்கு இன்னும் திருமணம் ஆகலையே என்ற விரக்தியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் எடுத்த முடிவு
தமிழத்தில் திருமணமாகாத விரக்தியில் 31 வயதான நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (31). இவர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்தார்.
தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்த இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை. தாயுடன் வசித்து வந்த ராஜேசுக்கு 2 தங்கைகள் உள்ளனர். 2 தங்கைகளுக்கும் ராஜேஷ் திருமணம் முடித்து வைத்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், தனது தாய் தூங்கிய பின்பு வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், தங்கைகளுக்கு திருமணம் முடித்து வைத்த பின்னரும் தனக்கு திருமணமாகவில்லையே என்ற விரக்தியில் ராஜேஷ் இருந்தார் என தெரியவந்தது.
மேலும் இதற்கு முன்பு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட ராஜேஷ் இரவு நேரத்தில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
