லண்டனை உலுக்கிய பகீர் சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்... நாட்டைவிட்டு தப்பிய கணவர்
லண்டனில் கார் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பிலான விசாரணையில் அதிர்ச்சி திருப்பமாக அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் விசாரணை
கிழக்கு லண்டனில் பிரிஸ்பேன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 24 வயதான ஹர்ஷிதாவின் சடலத்தை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, நார்தம்ப்டன்ஷைர் பொலிசார் கொலை விசாரணையைத் தொடங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, சர்வதேச அளவில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளதாக நார்தண்ட்ஸ் பொலிசார் தெரிவித்தனர். ஆனால் ஹர்ஷிதாவின் கணவர் பங்கஜ் லம்பா எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்பதை அதிகாரிகள் வெளிப்படுத்தவில்லை.
ஹர்ஷிதாவை அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஹர்ஷிதாவின் உடலை நார்தாம்ப்டன்ஷையரில் இருந்து இல்ஃபோர்டுக்கு காரில் லம்பா கொண்டு சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டை விட்டு ஓடிவிட்டார்
மட்டுமின்றி, அவர் தற்போது நாட்டை விட்டு ஓடிவிட்டார் என நம்புகிறோம். அத்துடன் பங்கஜ் லம்பாவின் புகைபடத்தையும் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
உடற்கூராய்வில், ஹர்ஷிதா படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றே தெரிய வந்துள்ளது. அத்துடன், ஹர்ஷிதா முன்பு குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர் என்பதையும் இது தொடர்பில் நார்த்தாம்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாடியவர் என்பதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |