துணிக்கடை பொம்மை ஒன்று எரிந்துகொண்டிருப்பதாக நினைத்த நபர் : தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
அமெரிக்காவில் வெட்டவெளியில் துணிக்கடை பொம்மை போல் ஒன்று எரிந்துகொண்டிருப்பதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்தார்.
வெட்டவெளியில் பற்றியெரிந்த தீ
அமெரிக்காவின் ப்ளோரிடாவில் வெட்டவெளியில் துணிக்கடை பொம்மை போல் ஒன்று எரிந்துகொண்டிருப்பது போல தோன்றுவதாகக் கூறி அவசர உதவியை அழைத்துள்ளார் வழிப்போக்கர் ஒருவர்.
உடனடியாக அங்கு விரைந்துள்ளனர் பொலிசார்.
Picture: WFTS
அதிரவைத்த காட்சி
ஆனால், பொலிசார் அந்த இடத்துக்குச் சென்றபோது, அதிர்ச்சியளிக்கும் காட்சி ஒன்றைக் காண நேர்ந்தது. ஆம், எரிந்துகொண்டிருந்தது பொம்மை அல்ல. அது மனித உடல்.
Picture: WFTS
அந்த உடலின் மேல் பாதி மோசமாக எரிந்துபோனதால், அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. அவர் யார், எப்படி இறந்தார், அவரது உடலுக்குத் தீவைத்தது யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Picture: WFTS