லட்சக்கணக்கில் டிப்ஸை அள்ளிக்கொடுத்த நபர்.., நான் அழுகிறேன் என வேதனையுடன் பதிவிட என்ன காரணம்?
ரெஸ்டாரண்ட் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட நபர் ஒருவர் லட்சக்கணக்கில் ரூபாயை டிப்ஸாக கொடுத்துள்ளார்.
ரூ.8.3 லட்சத்தை டிப்ஸாக கொடுத்த நபர்
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு மார்க் என்பவர் இரவு உணவு சாப்பிட சென்றுள்ளார். அவர் அங்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் ஆர்டர் செய்துள்ளார்.
இவர், தான் சாப்பிட்ட உணவுக்கு பெருந்தொகையை டிப்ஸாக வழங்க முடிவு செய்துள்ளார். பின்னர், சாப்பிட்டு முடித்ததும் ஊழியர் வந்து பில்லை கொடுத்துள்ளார். அப்போது, அவர் பெருந்தொகையை டிப்ஸாக கொடுத்துள்ளார்.
அதாவது, 32.43 அமெரிக்க டொலர் மதிப்புக்கு (இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.2700 ) சாப்பிட்டுள்ளார்.ஆனால் டிப்ஸாக 10 ஆயிரம் அமெரிக்க டொலர் (இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.8.3 லட்சம்) கொடுத்துள்ளார்.
பின்னர், அவருக்கு ரெஸ்டாரெண்ட்டின் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர். அவர் அளித்த பெருந்தொகையை ரெஸ்டாரெண்ட்டின் உரிமையாளர் 9 ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.
வேதனையுடன் பதிவு
இந்நிலையில், டிப்ஸாக கொடுத்த மார்க் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் அழுகிறேன், நீ அழுகிறாய், நாம் அனைவரும் அழுகிறோம்" எனக் குறிப்பிட்டு டிப்ஸாக வழங்கிய பில்லை பகிர்ந்துள்ளார். இதனிடையே, ரெஸ்டாரெண்ட்டின் மேனேஜர் மார்க்கிடம் தவறாக எழுதி விட்டீர்களா எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், "நான் தெரிந்து தான் எழுதினேன். எனது நண்பர் சமீபத்தில் இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கு இந்த நகரில் நடந்தது. அவரது நினைவாக இப்படி செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |