மனைவிக்காக தினமும் 320 கிலோமீற்றர் பயணிக்கு கணவர்! இணையத்தில் வைரல்
சீனாவில் திருமணமான நபர் ஒருவர் தனது மனைவிக்காக தினமும் 320 கிலோமீற்றர் பயணம் செய்வது வைரலாகியுள்ளது.
320 கிலோமீற்றர் பயணம்
Lin Shu என்ற 31 வயது நபரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில் அவர் தினமும் 320 கிலோமீற்றர் பயணிப்பதன் காரணம் தான்.
புதிதாக திருமணமான Lin, வெய்ப்பாங்கைச் சேர்ந்த தனது மனைவிக்காக ஒரு Flat வாங்கியுள்ளார். ஆனால் அங்கிருந்து அவரது கிங்டாவில் உள்ள அலுவலகம் செல்ல 3 மணிநேரம் ஆகும்.
இடைப்பட்ட தூரம் 160 கிலோமீற்றர் என்பதால், காலை 5 மணிக்கு எழும் Lin அதிகாலை 5.20 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
தற்காலிகமானது
ரயில் நிலையத்திற்கு 6.15 மணிக்கு செல்லும் அவர், 30 நிமிடங்கள் அங்கு பைக்கில் பயணிக்கிறார். 7.46 மணிக்கு கிங்டாவோவுக்கு வரும் Lin, இறுதியாக 15 நிமிட சுரங்கப்பாதை பயணத்தை மேற்கொண்டு அலுவலகத்தை அடைக்கிறார். இவ்வாறாக ஒரு நாளில் 320 கிலோமீற்றர் பயணம் செய்கிறார் Lin.
தனது காதல் மனைவிக்கு அவர் இப்படி பயணம் செய்து வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். எனினும், தனது மனைவியும் கிங்டாவோவில் வேலை தேடுவதனால், இந்த பயணம் தற்காலிகமானது தான் என்று கூறுகிறார். இந்த நிலையில் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் Lin-யின் பயண வீடியோவை பார்த்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |