200 மைல்கள் பயணித்து லண்டன் சென்றவர்... அங்கே நடந்த கொடுஞ்செயல்
யூதர்கள் மீதான வெறுப்பு காரணமாக மேற்கு யார்க்ஷயரில் இருந்து வடக்கு லண்டன் பகுதிக்கு பயணப்பட்டு மூன்று யூதர்களை தாக்கிய விவகாரத்தில் நபர் ஒருவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 14 வயது சிறுவன் உட்பட மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அப்துல்லா குரேஷி என்பவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
@PA
அப்துல்லா குரேஷி என்பவர் குற்றவாளி
கடந்த ஆகஸ்டு 18ம் திகதி வடக்கு லண்டனுக்கு புறப்பட்டு சென்ற அப்துல்லா குரேஷி, யூதர்கள் அதிகம் வசிக்கும் ஸ்டாம்போர்ட் ஹில் பகுதியில் தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.
ஆனால் விசாரணையின் போது, நடந்தவை வெறும் தற்செயலான சம்பவம் என்றே குறிப்பிட்டுள்ளார். கடை ஒன்றில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாகவே, அந்த தாக்குதல் சம்பவம் நடந்தது எனவும், அப்போது தாம் கோபத்தில் இருந்ததாகவும் குரேஷி குறிப்பிட்டுள்ளார்.
@PA
ஆனால் குரேஷி 200 மைல்கள் பயணப்பட்டு, திட்டமிட்டே தாக்குதலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து மத வெறுப்பு காரணமாக கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாகவும், மத வெறுப்பை தூண்டியதாகவும் கூறி அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
புலன்விசாரணை தலைமை இன்ஸ்பெக்டர் யாஸ்மின் லாலானி கூறுகையில், லண்டனில் எந்த வகையிலும் மத வெறுப்பு குற்றங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்
என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.