என்னுடன் வா! மாணவிகளிடம் கவர்ந்து பேசி காரில் அழைத்து செல்ல முயன்ற நபரால் பரபரப்பு
அமெரிக்காவில் உள்ள ஒரு இடத்தில் இளம்பெண்களை நைசாக கவர்ந்து பேசி அவர்களை காரில் அழைத்து செல்ல முயன்ற நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லவேளையாக இதில் எந்தவொரு பெண்ணும் அவருடன் காருக்குள் ஏறி செல்லவில்லை என தெரியவந்துள்ளது. Ardsley பகுதியில் தான் இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.
அன்றைய தினம் மூன்று வெவ்வேறு தருணங்களில் 40களில் உள்ள நபர் உயர்நிலை பள்ளி மாணவிகளை குறி வைத்து அவர்கள் அருகே காரில் சென்றுள்ளார்.
12 வயதில் திருமணம்! 15 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாய்... பல தடைகளை தாண்டி சாதித்த பெண்
பின்னர் மாணவிகளை இழுந்து உங்கள் பள்ளிக்கு தான் நானும் செல்ல வேண்டும், என்னுடன் காரில் வாருங்கள் நாம் சேர்ந்து செல்வோம் என கூறியிருக்கிறார்.
நல்லவேளையாக யாரும் காருக்குள் ஏறாமல் தப்பியுள்ளனர். பெண்களை கடத்தி செல்ல முயன்ற நபரின் தலைமுடி நிறம் கருப்பாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
அவர் பழைய மொடல் கார் ஒன்றை ஓட்டி வந்திருக்கிறார், அவர் குறித்தோ அல்லது அந்த வாகனம் குறித்தோ யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.