12 வயதில் திருமணம்! 15 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாய்... பல தடைகளை தாண்டி சாதித்த பெண்
12 வயதில் திருமணமாகி 15 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான பெண் பல்வேறு தடைகளை தாண்டி பின்னாளில் மூன்று முதுகலை பட்டங்களை வாங்கி சாதித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் சபியா Safiya Othayachandiyil. இவர் இப்போது 50 வயதை நெருங்கி கொண்டிருக்கிறார். Safiyaவுகு 12 வயதில் திருமணம் ஆகியிருக்கிறது. 15 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயானார்.
தனது 22வது வயதில் விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்த Safiya பத்தாம் வகுப்பை முடித்தார். பின்னர் கல்வியின் மீதுள்ள காதலால் மூன்று முதுகலை பட்டங்களை வாங்கியுள்ள அவர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
Safiya கூறுகையில், எனக்கு 12 வயதில் திருமணம் ஆனது, அப்போது என் கணவருக்கு 21 வயது. எனக்கு படிப்பின் மீதிருந்த ஆர்வத்தை என் கணவர் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டார்.
1985ல் எனக்கு திருமணம் ஆன நிலையில் 1995ல் மீண்டும் என் படிப்பை தொடர்ந்தேன், அதன்படின் அந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு படிப்பை முடித்தேன்.
குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இப்போது, பெரும்பாலான பெண்கள் மேற்படிப்புகளை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
என்னிடம் பயிலும் மாணவிகளை நன்றாகப் படிக்கவும், தங்களுக்கான அடையாளத்தை வளர்த்துக்கொள்ளவும் நான் வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022