பரபரப்பான ஆட்டத்தில் வெற்றியைப் பறித்த பெனால்டி: பிரீமியர் லீக்கில் அதகளம்
மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் போர்னேமௌத் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் போட்டி டிராவில் முடிந்தது.
கோல் விழாத முதல் பாதி
விடாலிட்டி மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், போர்னேமௌத் அணிகள் மோதின.

இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டதால் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை.
இரண்டாம் பாதியில் போர்னேமௌத் வீரர் அலெக்ஸ் ஜிமென்ஸ், எதிரணி வீரர் குன்ஹாவின் ஆடையைப் பிடித்து இழுத்ததால் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட புருனோ பெர்னாண்டஸ் தமது அணிக்கு முதல் கோலினை (61வது நிமிடம்) கொடுத்தார். அடுத்த 6 நிமிடங்களில் போர்னேமௌத் வீரர் ரியான் கிறிஸ்டி விரைந்து கோல் அடித்தார்.

சுயகோல்
அதன் பின்னர் 71வது நிமிடத்தில் கோல் தடுக்கும் முயற்சியில், ஜேம்ஸ் ஹில்லின் தலையில் பட்டு பந்து வலைக்குள் விழ மான்செஸ்டர் அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது.
இது அந்த அணியின் வெற்றி கோலாக அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்த சமயத்தில், மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஹாரி மெக்கியூரி எதிரணி வீரரை தள்ளிவிட்டார்.

இதன் காரணமாக அவருக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட, போர்னேமௌத் அணிக்கு பெனால்டி வாய்ப்பும் கிடைத்தது.
அந்த அணியின் Eli Junior Kroupi (81வது நிமிடத்தில்) அபாரமாக கோல் அடித்தார். அதற்கு கடைசிவரை மான்செஸ்டர் அணியால் கோல் அடிக்க முடியாததால், போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |