தெருவில் இறந்த நபர்... கல்லாக உறைந்து போன இருதயம்... உடற்கூராய்வில் மருத்துவர்களை அதிர வைத்த சம்பவம்
இந்தியாவின் கோவா மாநிலத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் இருதயம் மொத்தமாக உறைந்து கல்லாக மாறியதால் மரணமடைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோவா மாநிலத்தின் பிரபலமான பூங்கா ஒன்றில் பிச்சை எடுத்து வந்த, 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர் திடீரென்று மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், உரிய அதிகாரிகள் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
மருத்துவர்களின் முதற்கட்ட ஆய்வில், அந்த நபரின் மரணத்திற்கு குறிப்பிடத்தக்க காரணம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து உடற்கூராய்வு மேற்கொள்ள மருத்துவர் பரத் ஸ்ரீகுமார் என்பவரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
இந்த நிலையிலேயே, அதிரவைக்கும் அந்த சம்பவம் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது. மரணமடைந்த அந்த நபரின் இருதயம் உறைந்து கல்லாக மாறியிருந்தது.
இதுபோன்ற ஒரு சம்பவம் அங்கிருந்த மருத்துவர்கள் எவரும் எதிர்கொண்டதில்லை என்றே கூறுகின்றனர்.
உடற்கூராய்வின் ஒரு பகுதியாக அவரின் இருதயத்தை வெளியே எடுத்த மருத்துவர்கள், அது பொதுவாக ஒரு ஆணின் இருதயத்திற்கு இருக்கும் எடையை விட அதிகமாக இருந்துள்ளதும், மிகவும் கனமாகவும் இருந்துள்ளது.
ஆனால் அவரது இருதயத்தின் மொத்த அமைப்பு அதிகமொன்றும் மாறவில்லை, அது மிகவும் சாதாரணமாக இருந்துள்ளது.
மட்டுமின்றி, மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தியால், அதை இரண்டாக பிளக்கவோ வெட்டவோ முடியாமல் போயுள்ளது.
இறுதியில் மருத்துவர்கள் குழு போராடி இருதயத்தின் ஒரு பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தியதில், சாதாரண திசுக்களை கடினமான இழைம திசுக்களாக மாற்றும் ஒருவகை விசித்திர நோய் அது என கண்டறிந்தனர்.
அந்த தெருவோர பிச்சைக்காரரின் இருதயம் கொஞ்சம் கொஞ்சமாக இழைம திசுக்களாக மாறியதாலையே அவர் மரணமடைந்தார் எனவும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
கோவா மருத்துவக்கல்லூரி அந்த நபரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் எதையும் வெளியிடவில்லை,
ஆனால் அந்த நபரின் இருதயம் இழைம திசுக்களாக மாறிய புகைப்படம் ஒன்றை மட்டும் வெளியிட்டுள்ளனர்.
