அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்திற்கு பெருந்தொகை நன்கொடை அளித்த நபர் பாரிஸ் நகரில் சடலமாக மீட்பு
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்திற்கு பெருந்தொகையை வங்கி வழியாக அனுப்பிய பின்னர், பிரெஞ்சு சமூக ஊடக பதிவர் ஒருவர் பாரிஸ் நகர சொகுசு ஹொட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
குறித்த தகவலை உறுதி செய்துள்ள பாரிஸ் நகர பொலிசார், இந்த தற்கொலை விவகாரத்தில் மூன்றாவது நபரின் குற்றச்செயல்கள் ஏதும் எனவும் தெரிவித்துள்ளனர்.
35 வயதான Laurent Bachelier தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் டிசம்பர் 8ம் திகதிக்கும் பல நாட்கள் முன்னர், பாரிஸ் நகரில் அமைந்துள்ள பிரபலமான ஹையாத் ரீஜென்சி எட்டோய்ல் சொகுசு ஹொட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.
பின்னர் டிசம்பர் 8 ம் திகதி தமது சேமிப்பில் இருந்து சுமார் 520,000 டொலர் தொகையை டிரம்ப் ஆதரவாளர்கள் என கூறப்படும், அமெரிக்க நாடாளுமன்ற கலவரக்காரர்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
அவர் ஏன் ஹொட்டல் அறையை வாடகைக்கு எடுக்க முடிவு செய்தார் மற்றும் பிரெஞ்சு தலைநகரின் வடக்கு புறநகர்ப் பகுதியில் மூன்று மைல் தொலைவில் உள்ள தனது குடியிருப்பை ஏன் பயன்படுத்தவில்லை என்பது உள்ளிட்ட தகவல்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக நரம்பு தொடர்பான வலி மிகுந்த ஒருவகை நோயால் Laurent Bachelier அவதிப்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று அளவுக்கு அதிகமான வீரியம் மிக்க போதை மருந்துகளை அவர் உட்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
அதுவே அவரது மரணத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 28.15 பிட்காயின் வடிவிலான தொகையை Nick Fuentes என்பவரது கணக்கில் அனுப்பிய சில மணி நேரங்களில் Laurent Bachelier தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


