2 மனைவிகள், 5 பிள்ளைகள்! ஆசையுடன் 47 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கென்யாவில் 47 ஆண்டுகளுக்கு முன் 2 மனைவிகளை விட்டு சென்ற கணவன் வீடு திரும்பியதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
கென்யாவின் Malava-வில் உள்ள Makale கிராமத்தை சேர்ந்தவர் Peter Oyuka, தற்போது 84 வயதாகும் இவர், கடந்த 1974-ஆம் ஆண்டு, தன்னுடைய இரண்டு மனைவிகள் மற்றும் ஐந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நல்ல மேய்ச்சல் நிலம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க சென்றுள்ளார்.
இவர் அதன் பின் பல ஆண்டுகளாக திரும்பவேயில்லை. இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிய போது, தன்னுடைய மனைவிகளை எதிர்நோக்கி பார்த்துள்ளார்.
ஆனால், அவர் மனைவிகளோ, வேறொரு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருக்கும் உள்ளூர் ஊடகத்திற்கு நான் திரும்பி வரும் போது, என்னுடைய இரண்டு மனைவிகளும் என்னை வரவேற்பார்கள் என்று நினைத்தேன்.
அவர்கள் திருமணம் செய்து கொண்டது வருத்தமாக இருப்பதாக கூறும் அவர், தான் இத்தனை ஆண்டுகளாக தசன்யாவில் வேறொரு பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டேன்.
ஆனால் அவர் தன்னுடைய குழந்தையை பார்க்கவேவிடாத காரணத்தினால் அவரை விட்டு பிரிந்து, என்னுடைய வீட்டிற்கு திரும்பினேன்.
இருப்பினும், என் மனைவிகள் இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையட்டும், நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரிய வேண்டும் என்று விரும்புவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.