ஒரே நாளில் ரூ 46,485 கோடியை இழந்த தமிழர்... அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 340,793 கோடி
டாடா, பிர்லா, அம்பானி, அதானி உட்பட பல கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடு இந்தியா. இவர்களில் பலபேர் ஆண்டு தோறும் பெரும் தொகையை பல்வேறு காரணங்களுக்காக நன்கொடையும் அளித்து வருகின்றனர்.
9 சதவீதம் வீழ்ச்சி
இத்தகைய கோடீஸ்வரர்கள்தான் இந்தியாவில் ஐடி, தொலைத்தொடர்பு போன்ற சிறந்த பல நிறுவனங்களையும் உருவாக்கி உள்ளனர். வெற்றிகள் பல குவித்தாலும், பல நேரங்களில் பல்வேறு காரணங்களால் அவர்கள் ஒரு சில மணி நேரங்களுக்குள் பேரிழப்பையும் சந்திக்கின்றனர்.
செவ்வாயன்று, ஒரு இந்திய கோடீஸ்வரரின் நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் வீழ்ச்சி கண்டதால், அவர் ரூ.46,485 கோடியை இழந்தார். அவர் HCL நிறுவனரான Shiv Nadar என்ற தமிழர்.
டிசம்பர் காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து, HCL நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் HCL பங்கின் விலை 8.63 சதவீதம் சரிந்து ரூ.1,813.95 ஆக நிலைபெற்றது.
பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி நிறுவனங்களில் HCL பங்கு மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. பகலில், 9.41 சதவீதம் சரிந்து ரூ.1,798.40 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் ஒரு பங்கின் விலை 8.51 சதவீதம் சரிந்து ரூ.1,819.95 ஆக இருந்தது.
ஒவ்வொரு நாளும் ரூ 5.9 கோடி
ஜனவரி 14 ஆம் திகதி நிலவரப்படி, HCL நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.492,245.28 கோடியாக சரிவடைந்தது. HCL நிறுவனத்தின் சந்தை மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்தாலும், ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 39.4 பில்லியன் அமெரிக்க டொலர் (ரூ 340,793 கோடி) என்றே கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க இந்தியாவின் மிகப்பெரிய நன்கொடையாளராகவே ஷிவ் நாடார் அறியப்படுகிறார். 2024 நிதியாண்டில் ஷிவ் நாடார் மொத்தம் ரூ 2,153 கோடி நன்கொடையாக செலவிட்டுள்ளார்.
அதாவது ஒவ்வொரு நாளும் ரூ 5.9 கோடி நன்கொடை அளித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியாவின் மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட நன்கொடையாளர் என்ற சிறப்பை தமிழரான ஷிவ் நாடார் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |