ரூ.210 கோடிக்கு மேல் மின்கட்டணம் வந்தததால் அதிர்ச்சியடைந்த நபர்
ரூ.210 கோடிக்கு மேல் மின்சார கட்டணம் வந்திருப்பதை கண்டு நபர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ரூ.210 கோடிக்கு மின்கட்டணம்
இந்திய மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பெகர்வின் ஜட்டன் கிராமத்தை சேர்ந்தவர் லலித் திமான். இவர், சிறிய அளவிலான கான்கிரீட் வியாபாரத்தை நடத்தி வருகிறார்.
இவருக்கு கடந்த டிசம்பர் மாத மின்கட்டணமாக வந்த பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதாவது, ரூ.210 கோடியே 42 லட்சத்து 8,405 மின்சார கட்டணமாக செலுத்த ரசீது வந்தது.
ஆனால், இதற்கு முந்தைய மாதமான நவம்பரில் மின்கட்டணம் ரூ.2,500 மட்டுமே செலுத்தியிருந்தார்.
இதையடுத்து, மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அங்கு அவர்கள் சரிபார்த்ததில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கூறினர். பின்னர், மின்சார கட்டணத்தை ரூ.4,047 ஆக குறைத்தனர்.
இதேபோல, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் குஜராத் மாநிலத்தில் அன்சாரி என்ற தையல்காரருக்கு ரூ.86.41 லட்சம் மின்சார கட்டணம் வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |