பிரித்தானிய இளவரசி கேட்டுடன் கை குலுக்க மறுத்த நபர்: கமெராவில் சிக்கிய காட்சி...
பிரித்தானிய இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேட் மிடில்டனும் சமீபத்தில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கேட்டுடன் கைகுலுக்க மறுத்தார்.
அவர் கைகுலுக்க மறுப்பதையும், அதை உடனடியாக சமாளித்து கேட் செய்த செயலையும் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
இளவரசி கேட் மிடில்டனுடன் கை குலுக்க மறுத்த நபர்
Image: 2023 WPA Pool via Getty
இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும், துருக்கி மற்றும் சிரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டிய தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்வதற்காக மேற்கு லண்டனிலுள்ள Hayes என்ற இடத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய மையம் ஒன்றிற்கு சென்றிருந்தார்கள்.
அப்போது உள்ளூர் இஸ்லாமிய தலைவர்களை அவர்கள் சந்தித்தார்கள். இருவரும் அந்த தலைவர்களுடன் கைகுலுக்கிய நிலையில், ஒருவர் மட்டும் இளவரசி கேட்டுடன் கை குலுக்க மறுத்தார்.
அதற்கு பதில், தன் கையை தன் நெஞ்சில் வைத்து குனிந்து இளவரசிக்கு தனது மரியாதையை செலுத்தினார்.
Image: 2023 WPA Pool via Getty
சமாளித்த இளவரசி
அவர் தன்னுடன் கைகுலுக்க மறுத்ததை உணர்ந்தாலும், சட்டென தானும் நெஞ்சில் கைவைத்து அவரைப்போலவே சற்றே குனிந்து பதில் வணக்கம் செய்தார் இளவரசி. இந்த காட்சிகளை ட்விட்டரில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
இஸ்லாமிய கலாச்சாரப்படி ஆண்கள் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை என்பதால் அந்த நபர் இளவரசியுடன் கை குலுக்கவில்லை என கூறப்பட்டாலும், அதே இடத்தில் மற்ற ஆண்கள் அவருடனும், ராணி கமீலாவுடன் கைகுலுக்கிய காட்சிகளும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
The Prince and Princess of Wales have met earthquake aid workers, as well as fundraisers from the Turkey-Syria Earthquake Appeal https://t.co/8xyWy2cBPY pic.twitter.com/lHJtJKOq4t
— Sky News (@SkyNews) March 9, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.