பானி பூரி விற்ற இளைஞர் இப்போது இஸ்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர்.., எப்படி சாத்தியமானது?
பானி பூரி விற்ற இளைஞர் தனது திறமையினால் இஸ்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர் ஆகியுள்ளார்.
இஸ்ரோவில் வேலை
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, கோண்டியா மாவட்டத்தில் உள்ள நந்தன் நகரைச் சேர்ந்த பானி பூரி வியாபாரி ராமதாஸ். இவரது தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் பள்ளியில் பியூனாகப் பணியாற்றிவிட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக தொழில்நுட்ப படிப்புக்கு பதிலாக ராம்தாஸ் பி.ஏ. படித்தார். மேலும், நிதி செலவுக்காக பகலில் பானி பூரி விற்றும், இரவில் படித்தும் வந்தார்.
இதையடுத்து, டிரோராவில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ஐடிஐ) சேர்ந்து பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக் படித்தார். அங்கு, நீர் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு பராமரிப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான திறன்களை வளர்த்துக் கொண்டார்.
பின்னர் 2023-ம் ஆண்டில் பயிற்சிப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை இஸ்ரோ வெளியிட்டது. இதில் விண்ணப்பித்த ராமதாஸ், 2024 ஆம் ஆண்டு நாக்பூரில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, திறன் தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.
பின்னர், இஸ்ரோவில் இருந்து மே 19, 2025 திகதியிட்ட சேர்க்க கடிதமானது அவருக்கு வந்தது. தற்போது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி மையத்தில் பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக்காக ராமதாஸ் சேர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |