பிரான்சில் குழந்தைகளைக் கத்தியால் குத்திய நபர் குறித்த சமீபத்திய தகவல்
கடந்த வியாழக்கிழமை, பிரான்சிலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான Annecy என்னும் ஏரியின் அருகிலுள்ள விளையாட்டுத்திடல் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை ஒருவர் திடீரென கத்தியால் தாக்கத் துவங்கினார், தடுக்க முயன்றவர்களுக்கும் கத்திக் குத்து விழுந்துள்ளது.
யார் அந்த தாக்குதல்தாரி?
குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய அந்த நபருடைய பெயர் அப்தல்மாசி (Abdalmasih H, 31) என்றும், அவர் சிரியா நாட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
தாக்கப்பட்ட குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இரண்டு வயதுடையவர்கள், ஒரு குழந்தைக்கு மூன்று வயது, மற்றொரு குழந்தை 22 மாதக் குழந்தை.
© Laurent Cipriani, AP
இந்நிலையில், தாக்கப்பட்ட அனைவருமே அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குற்றவாளியைக் குறித்த சில தகவல்கள்
அப்தல்மாசிக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஸ்வீடன் நாட்டவரான பெண் ஒருவரைத் திருமணம் செய்து, ஸ்வீடனில் அகதி நிலை பெற்றுள்ளார் அப்தல்மாசி. அவரும் அவரது மனைவியும் எட்டு மாதங்களுக்கு முன் பிரிந்துவிட்டிருக்கிறார்கள்.
அப்தல்மாசி பிரான்சில் புகலிடம் கோரியுள்ளார். ஆனால், நான்கு நாட்களுக்கு முன், அவரது புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் மட்டுமின்றி, சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலியிலும் அவர் புகலிடம் கோரியுள்ளார்.
Head Topics
அவர் ஏற்கனவே ஸ்வீடனில் புகலிடம் பெற்றிருப்பதால், பிரான்சில் அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin தெரிவித்துள்ளார்.
புதிய தகவல்
நேற்று அப்தல்மாசி Lyon நகருக்கு அருகிலுள்ள மன நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இதுவரை அதிகாரிகளிடம் வாய் திறந்து எதுவுமே பேசவில்லை.
ஆகவே, அவர் எதற்காக குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தினார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |