லொட்டரியில் முதியவருக்கு 2 மில்லியன் டொலர் பரிசு: பின்னணியில் ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம்
கொரோனாவுக்கு முன்பு வாங்கிய லொட்டரியில் 2 ஆண்டுகளுப் பிறகு நடந்த குலுக்கலில் முதியவர் ஒருவர் 2 மில்லியன் டொலர் தொகையை வென்று ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவின் சாலிஸ்பரியைச் சேர்ந்த குறித்த 65 வயது முதியவர் இரண்டு லொட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். ஓய்வுபெற்ற தொழிலாளியான அவர் லொட்டரி சீட்டை வாங்கிய பிறகு கொரோனா பரவல் காரணமாக குலுக்கல் திகதி மாற்றப்பட்டது.
இதனால் அவர் தான் வாங்கிய லொட்டரி டிக்கெட்டை பாதுகாக்க பெரும் பாடுபட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் சற்று பதட்டமாக இருந்தேன். எங்கள் வீட்டில் தீ ஏற்பட்டால் டிக்கெட் எரிந்துவிடும் என்று நான் கவலைப்பட்டேன்,
டிக்கெட்டின் காலாவதியாகி விட்டதாக அறிவிப்புக் கூட வரலாம், அது உண்மைதானா என்ற சந்தேகம் கூட இருந்தது. இதனால் பல நாட்கள் கவலையுடன் இருந்தேன். கொரோனா காலத்தில் எனது மனச்சுமை மிகவும் அதிகமாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா பாதிப்பு கட்டுக்குள்வர லொட்டரி டிக்கெட் குலுக்கல் நடந்தது. அப்போது அவர் வாங்கிய இரண்டு லொட்டரிக்கும் பரிசு விழுந்துள்ளது.
முதல் டிக்கெட்டில் அவருக்கு 100 டொலர் பணம் கிடைத்துள்ளது. இரண்டாவது டிக்கெட்டில் 2 மில்லியன் டொலர் ஜாக்பாட் தொகையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.