ஆடை இல்லாமல் இருந்த மனிதரை புகைப்படம் எடுத்த கூகுள்., ரூ.38 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஆடை இல்லாமல் இருந்த மனிதரை புகைப்படம் எடுத்த கூகுள் நிறுவனத்திற்கு ரூ.38 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அர்ஜெண்டினாவை சேர்ந்த ஒருவர், 2017-ல் தனது வீட்டின் பின்புற மாடியில் நிர்வாணமாக இருந்தபோது கூகுள் ஸ்ட்ரீட் வியூ கார் அவரை புகைப்படமாக பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது அந்த நபர் 6 அடி 6 அங்குல உயரமுள்ள சுவருக்குள் இருந்தும், அவரின் முழு நிர்வாண உடலும், வீட்டு எண் மற்றும் தெரு பெயரும் தெளிவாகக் காணப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
அப்பகுதியில் காவல்துறையில் பணியாற்றும் அந்த நபர், இது அவரது மரியாதையை சேதப்படுத்தியதாகவும், சக ஊழியர்களிடமும் அண்டை வீட்டாரிடமும் அவமானத்திற்கு உள்ளாக்கியதாகவும் கூறி, 2019-ல் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
முதலில் வழக்கை நிராகரித்த நீதிமன்றம், அவர் வெளியே "தகாத நிலை"யில் இருந்ததாக குற்றம்சாட்டியது.
ஆனால், அண்மையில் மேல்மட்ட நீதிமன்றம் அந்த முடிவை முற்றிலும் மாற்றி, அவருக்கு $12,500 (இலங்கை பணமதிப்பில் ரூ.37.7 லட்சம்) இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
"ஒருவர் தங்கள் இல்ல எல்லைக்குள் நிர்வாணமாக இருப்பது, பொது இடத்தில் காட்டப்படுவது முற்றிலும் தனியுரிமை மீறலாகும்," என நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
இந்நிலையில், கூகுள் தனது புகைப்படங்களில் முகங்கள் மற்றும் வாகன எண்களை தானாக மறைக்கும் தொழில்நுட்பம் இருப்பதாகக் கூறினாலும், இச்சம்பவத்தில் முழுமையான தவறு செய்ததாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |