பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவை 2-வது திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர்! அதற்கு அவர் கணவர் கூறிய பதில்
பிரபல தொகுப்பாளினி தனது ரசிகர் ஒருவர் 2-ஆம் திருமணம் செய்ய ஆசைப்பட்டதால், அதற்கு அஞ்சனாவின் கணவர் கொரியரில் அனுப்பிவிடுகிறேன் என்று விளையாட்டாக கூறியுள்ளார்.
தமிழில் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அஞ்சனா, இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் பிரபல திரைப்பட நடிகரான சந்திரனை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து ஒதுங்கியிருந்த அஞ்சனா, இப்போது மீண்டும் தொகுப்பாளினியாக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இருக்கிறார்.
????? @AnjanaVJ @moulistic pic.twitter.com/HVwgBSNyw2
— Anbu (@Mysteri13472103) March 15, 2021
இந்நிலையில், இவர் சமூகவலைத்தள பக்கத்தில், தன்னுடைய ரசிகர்களுக்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்படி ரசிகர் ஒருவர், அஞ்சனாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கேட்க, அதற்கு அஞ்சனா நான் இது குறித்து என் கணவரிடம் கூறினேன், அதற்கு அவர் கேட்ட ரசிகரின் விலாசத்தை வாங்கு நானே உன்னை அனுப்பி வைக்கிறேன்.
அப்போ பாருங்க, நான் அவர்களை எவ்ளோ கஷ்டப்படுத்துகிறேன் என்று, எதுக்கு இது எல்லாம் தேவையா என்று பதில் அளித்துள்ளார்.