ஒவ்வொரு நாளும் நரக வேதனை - முதலை போன்ற தோலுடன் போராடும் மனிதன்
முதலை போல் கடுமையான கரடுமுரடான தோலை கொண்ட ஒரு மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நரக வேதனையை எதிர்கொண்டுவருகிறார்.
அமெரிக்காவில் ஜிம்மி என்ற நபர் வறண்ட சருமத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அரிப்பு காரணமாக அடிக்கடி இரத்தம் வரும் நிலையில் அவதிப்பட்டிருக்கிறார். இதனால் அவரால் ஆடைகளை கூட அணிய முடியாது. முதலை போன்ற கரடுமுரடான தோல் காரணமாக தான் அனுபவித்துவரும் நன்றாக வேதனையான வாழ்க்கையைப் பற்றி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில், அவரால் சிறிது நேரம் கூட சொறியாமல் இருக்க முடியவில்லை, அரிப்பு தாங்கமுடியாமல் உடல் முழுவதும் தனது நகங்களால் கீறிக்கீறி அவரது தோல் உரிந்து அங்குங்கு இரத்தம் வருகிறது.
TLC
"என் கால்கள், என் கைகள், என் முதுகு, என் மார்பு முழுவதும் இந்த தடிப்புகள் உள்ளன, நான் ஒரு முதலையின் மீது என் விரல்களை தேய்ப்பது போல் உணர்கிறேன்.., என் தோலில் இருப்பது, ஒரு அரிப்பு நரகம்" என்று அவர் வேதனையுடன் கூறுகிறார்.
அமெரிக்காவில் டாக்டர் பிம்பிள் பாப்பர் என்று பிரபலமாக அறியப்பட்ட தோல் மருத்துவரான சாண்ட்ரா லீயை ஜிம்மி சந்தித்து சிகிச்சை பெறச் சென்றதாக அவர் கூறுகிறார்.
"தினமும் அது ஒரு நரகம் தான், நான் சொறிந்துகொண்டே இருக்க போகிறேன் என்று எனக்குத் தெரியும், இருந்தும் என் மனதை விட்டுவிடாமல் மற்ற விஷயங்களால் என் மனதை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறேன்." என்று அவர் கூறுகிறார்.
TLC
மேலும், தனது உடல் 90 சதவீதம் வறண்ட சருமத்தால் மூடப்பட்டிருப்பதால் சரியான ஆடைகளை அணிய முடிவதில்லை என்கிறார். "ஆடைகள் மிகவும் மோசமாக வலிக்கிறது, நான் ஷார்ட்ஸ் அணிய வேண்டும், சட்டை அணியமுடியாது.." என்று ஜிம்மி கூறுகிறார்.
"எனது உடலின் மிக மோசமான பகுதி என்றால் அது என் கால்கள் தான்.., அரிப்பால் நான் என் விரல் நகங்களால் தோலைக் கிழிக்கிறேன், சில சமயங்களில் மிகவும் மோசமாக இரத்தம் கசியும்," என்று அவர் மேலும் கூறினார்.