20 ஆண்டுகளுக்கு முன் ரூ 2.கோடி! தற்போது ரூ 18.கோடி... பணத்தை அள்ளும் அதிர்ஷ்டகார நபர்
அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் லொட்டரியில் ரூ 2 கோடி பரிசு விழுந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ 18 கோடிக்கும் அதிகமான பரிசு விழுந்துள்ளது.
விர்ஜினியாவை சேர்ந்தவர் ஆல்வின் கோப்லேண்ட். இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் லொட்டரியில் கிட்டத்தட்ட ரூ 2 கோடிக்கு மேல் பரிசு விழுந்தது.
இவ்வளவு பெரிய பரிசு விழுந்துவிட்டதே என ஆல்வின் லொட்டரி விளையாடுவதை நிறுத்தவில்லை.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் லொட்டரியில் ஆல்வினுக்கு ரூ 18 கோடிக்கும் அதிகமான பரிசு விழுந்திருக்கிறது.
இதையடுத்து தற்போது அந்த பரிசை அவர் பெற்றுள்ளார்.
இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என ஆல்வின் கூறியுள்ளார், அவர் ஒரு அதிர்ஷ்டத்தின் உருவம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.