விரைவில் கோடீஸ்வரராக மாற திட்டம் போட்டு இளைஞர் செய்த செயல்! இறுதியில் நடந்தது என்ன?
ஐரோப்பியாவில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் ஆறு நிறுவனத்தில் பணிபுரிந்து அசத்தி வருகின்றார்.
உலகளவில் கொரோனா தொற்று மிக மோசமாக தாக்கி வருகின்றது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு Work From Home திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்து வருகின்றனர். சில நிறுவனங்கள் வீட்டில் வேலை செய்வதால் நீண்ட நேரம் வேலை செய்ய கூறி வலியுறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றது.
இதனால் திடீர் மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியில்ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பியா நாட்டில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் Work From Home திட்டத்தில் ஒரே நேரத்தில் சுமார் 6 நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுவதாவது, நான் ஐடி துறையில் பணியாற்றி வருகிறேன். ஆறு நிறுவனத்தில் முழுநேரமாக பணி செய்யும் நான் இந்த வருடத்தில் 5.27 கோடி சம்பாதிக்க இருப்பதாக கூறியுள்ளார். அதோடு 40 வயது ஆகும் போது தான் ஓய்வுபெற திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.