கவுண்டி தொடரில் 2 வது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றிய மானவ் சுதார்
manav suthar second 5 wicket haul in county cricket: மானவ் சுதார், கவுண்டி தொடரில் 2 வது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
கவுண்டி சாம்பியன்ஷிப்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் செப்டம்பர் 15 ஆம் திகதி தொடங்கிய போட்டியில் வார்விக்ஷயர் மற்றும் எசெக்ஸ் அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தொடங்கிய எசெக்ஸ் அணி, 44 ஓவர்களில் 134 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

எசெக்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் பெல் 61 ஓட்டங்கள் குவித்தார். வார்விக்ஷயர் தரப்பில் ஈதன் பேம்பர் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய வார்விக்ஷயர் அணி, 61.1 ஓவர்களில் 191 ஓட்டங்கள் குவித்தது.
வார்விக்ஷயர் தரப்பில் அதிகபட்சமாக சாம் ஹெய்ன் 88 ஓட்டங்கள் குவித்தார். எசெக்ஸ் தரப்பில் மேத்யூ கிரிட்ச்லி 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

2வது இன்னிங்க்ஸை ஆட தொடங்கிய எசெக்ஸ் அணி 181 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
5 விக்கெட்களை கைப்பற்றிய மானவ் சுதார்
எசெக்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் மானவ் சுதார் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து, 133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வார்விக்ஷயர் அணி, 25.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 138 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக கிளாமோர்கன் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓட்டம் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, 131 ஆண்டுகளில் எந்த வீரரும் செய்யாத சாதனையை மானவ் சுதார் படைத்தார்.
மானவ் சுதார் இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மொத்தமாக 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
24 வயதான மானவ் சுதார், கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, தனது முதல் இன்னிங்ஸில் 33 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, காலியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 76 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 55 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.