பிரித்தானியாவில் சீன தூதரகத்திற்குள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நபர்: அவர் வெளியிட்ட பகீர் தகவல்

London Xi Jinping China Hong Kong
By Arbin Oct 19, 2022 07:41 PM GMT
Report

ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் James Cleverly காட்டம்

தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மீது தாக்குதல் சம்பவம் மீண்டும் இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் அமைந்துள்ள சீன தூதரகத்திற்குள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நபர், பகீர் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

மான்செஸ்டரில் உள்ள சீன துணை தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய பாப் சான் என்பவரே, தமக்கு நேர்ந்த கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். மாஸ்க் அணிந்திருந்த சிலர் தம்மை தரதரவென இழுத்துச் சென்று, எட்டி உதைத்ததாகவும் சரமாரியாக குத்துவிட்டதாகவும் பாப் சான் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் சீன தூதரகத்திற்குள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நபர்: அவர் வெளியிட்ட பகீர் தகவல் | Manchester Chinese Consulate Man Dragged Into

@reuters

இந்த விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் James Cleverly காட்டமாக தெரிவித்துள்ளார். சீனத்து ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மான்செஸ்டரில் அமைந்துள்ள தூதரகம் முன்பு ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே திடீரென்று குறித்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் சீன தூதரகத்திற்குள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நபர்: அவர் வெளியிட்ட பகீர் தகவல் | Manchester Chinese Consulate Man Dragged Into

@getty

ஹொங்ஹொங்கை சேர்ந்த 30 வயது கடந்த பாப் சான் என்பவரே சம்பவத்தின் போது சீனத்து தூதரக அதிகாரிகளால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கடுமையாக துன்புறுத்தப்பட்டவர்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பதாகைகளை அப்புறப்படுத்த தூதரக அதிகாரிகள் முதலில் கோரியுள்ளனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க, பாப் சான் என்பவர் மீது திடீரென்று பாய்ந்து, தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

பிரித்தானிய பொலிசார் ஒருவர் துரிதமாக செயல்பட்டு, தூதரக அதிகாரிகளிடம் இருந்து அந்த நபரை மீட்டுள்ளார். இந்த திடீர் தாக்குதலை அடுத்து, தமது குடும்பத்தின் பாதுகாப்பு மீது அச்சம் எழுந்துள்ளதாக பாப் சான் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் சீன தூதரகத்திற்குள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நபர்: அவர் வெளியிட்ட பகீர் தகவல் | Manchester Chinese Consulate Man Dragged Into

@getty

இந்த நிலையில், சீன தூதரக முக்கிய அதிகாரியிடம் விளக்கம் கேட்டு பிரித்தானியா நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. தற்போது பிரித்தானிய குடிமக்களான ஹொங்ஹொங் மக்கள் சுமார் 40 பேர் தொடர்புடைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகவும்,

மிகவும் அமைதியாகவும் சட்டத்திற்கு உட்பட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் James Cleverly தெரிவித்துள்ளார். பிரித்தானிய மண்ணில் அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, சீனா தரப்பில் இந்த விவகாரம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US