சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?
பிரீமியர் லீக் தொடரில் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பிரீமியர் லீக்
எடிகாட் மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (Manchester City) மற்றும் வெஸ்ட் ஹாம் (West Ham) அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் இரண்டாவது நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி வீரர் ஃபில் ஃபோடென் (Phil Foden) கோல் அடித்தார்.
.@premierleague Player of the Season for a reason ? pic.twitter.com/MtA93Oc0Lb
— Manchester City (@ManCity) May 19, 2024
அதனைத் தொடர்ந்து 18வது நிமிடத்தில் அவரே 2வது கோலும் அடித்தார். இதற்கு பதிலடியாக வெஸ்ட் அணி வீரர் முகமது குடுஸ் (Mohammed Kudus) 42வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
விரக்தியில் மண்டியிட்டு அமர்ந்த ரொனால்டோ! மெஸ்ஸி..மெஸ்ஸி என கூச்சலிட்டு வெறுப்பேற்றிய ரசிகர்கள் (வீடியோ)
சாம்பியன் பட்டம்
ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் ரோட்ரி (Rodri) கோல் அடிக்க, மான்செஸ்டர் சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் தொடர்ச்சியாக 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. அத்துடன் பரிசுத்தொகையாக 62.3 மில்லியன் பவுண்டுகளை பெற்றது.
இரண்டாம் இடம் பிடித்த ஆர்செனல் அணி (Arsenal) 59.1 மில்லியன் பவுண்டுகளையும், லிவர்பூல் (Liverpool) 56 மில்லியன் பவுண்டுகள் மற்றும் ஆஸ்டன் வில்லா (Aston Villa) 52.9 மில்லியன் பவுண்டுகள் பரிசுத்தொகையையும் பெற்றன.
FOUR-IN-A-ROW!!!!
— Manchester City (@ManCity) May 19, 2024
We're @premierleague champions ???? pic.twitter.com/blRyxjPqJB
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |