மான்செஸ்டரில் 15 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: பதின்ம வயது சிறுவன் கைது
பிரித்தானியாவில் 15 வயது சிறுவன் கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் 15 வயது சிறுவன் கத்திக்குத்து சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை காலை சம்பந்தப்பட்ட பகுதியில் சில நபர்களை உள்ளடக்கிய கலவரம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த சிறுவனை கண்டுபிடித்தனர். இருப்பினும் இறுதியில் சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்த துயர சம்பவத்திற்கு பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 5.20 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றி பிரிவு-60 ஐ பொலிஸார் அமுல்படுத்தினர்.
பதின்ம வயது சிறுவன் கைது
இந்த கொலை தொடர்பாக தற்போது பொலிஸார் 15 சிறுவன் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |