உக்ரைன் தாக்கிய 3,500 ட்ரோன்கள்: நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிகரிக்கும் ரஷ்ய வான்வழித் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலை நடத்தி வருவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மட்டும் 3,500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் உக்ரைனுக்கு எதிராக ஏவப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
#BREAKING:
— Jahangir (@jahangir_sid) September 7, 2025
🚨#Russia launched a major drone and missile strike on #Kyiv, causing a fire at Ukraine’s Cabinet of Ministers building.
The attack hit residential areas and multiple regions across #Ukraine.
About 1,000 drones attacked Ukraine overnight, which may be a record. pic.twitter.com/7EtHJogR3M
அத்துடன் 190 ஏவுகணைகளும், 2,500 வான்வழி குண்டுகளையும் ரஷ்யா உக்ரைன் மீது வீசி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை வான்வழி பயங்கரம் என கண்டித்துள்ள ஜெலென்ஸ்கி, இதனை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
பல அடுக்கு வான் பாதுகாப்பு வேண்டும்
மேலும் ஐரோப்பிய பிராந்தியத்தை பாதுகாக்க பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் வேண்டும் என்றும், வான்வழி பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டு பாதுகாப்புக்கு அழைப்பு விடுவதாகவும் நட்பு நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் மூலம் யாரும் விரைவாக போர் விமானங்களை அனுப்ப வேண்டிய நிலை இருக்காது என்றும், உக்ரைனுக்கு அதன் எல்லைகளில் பதற்றம் இருக்காது என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
In Zaporizhzhia, first responders have completed extinguishing fires after the city was shelled by Russian rocket artillery. They struck deliberately to terrorize our people – 13 were wounded, including two children. Many residential buildings were damaged. In the Mykolaiv… pic.twitter.com/HPJeE4j1ER
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) September 16, 2025
2 குழந்தைகள் உயிரிழப்பு
X தளப் பதிவில் வெளியிட்ட தகவலில், சபோரிஜியா பகுதியில் நடந்த தாக்குதலில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டதோடு 13 பேர் காயமடைந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |