15 வயது இளம் திரை நட்சத்திரம் மாரடைப்பால் உயிரிழந்தது எப்படி?
பாகிஸ்தானின் இளம் நட்சத்திரமான உமர் ஷா திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 வயதான உமர் ஷா தனது இனிமையான புன்னகை மற்றும் திரையில் காட்டும் துடிப்பான ஆற்றல் மூலம் பிரமடைந்த நிலையில், திங்கட்கிழமை அவரது ஊரான டேரா இஸ்மாயில் கானில் உயிரிழந்தார்.
குடும்பத்தினர் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் படி, உமர் ஷாவுக்கு ஏற்பட்ட அதிகப்படியான வாந்தி காரணமாக அவரது நுரையீரலுக்குள் திரவம் சென்றுள்ளது, இது இறுதியில் அவருக்கு மாரடைப்பை தூண்டி இறப்புக்கு வித்திட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
அதே சமயம் அவரது வீட்டில் இருந்த விஷ பாம்பு தொடர்பான தகவலும் முன்வைக்கப்பட்டாலும், அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
உமர் ஷாவின் உயிரிழப்பை அவரது மூத்த சகோதரர் அஹ்மத் ஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து குடும்பத்தினரின் சோகத்தை வெளிப்படுத்தினார்.
சிறு வயதில் திரை பிரபலம்
சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான உயர்ந்த உமர் ஷா தொலைக்காட்சி நட்சத்திரமாக புகழ் பெற்றார்.
உமர் ஷா மற்றும் அவரது சகோதரரின் “பீச்சே தோ தேக்கோ” என்ற ரீல் சமூக ஊடகங்களில் அனைவருக்கும் விருப்பமானதாக இருந்தது.
மேலும் அவர்கள் Jeeto Pakistan மற்றும் Shan-e-Ramazan போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவரது ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்தினார்.
இந்நிலையில் உமர் ஷாவின் மரணம் திரையிலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, பலர் தங்கள் இரங்கலை சமூக ஊடகம் வழியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |