மாம்பழம் இல்லாமலேயே மாம்பழ ஜூஸ் தயாரிப்பு! வைரலாகும் வீடியோ
மாம்பழங்களை பயன்படுத்தாமல் மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
பொதுவாகவே மாம்பழம் என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதுவும் சீசன் சமயங்களில் மாம்பழ விற்பனை அமோகமாக நடைபெறும். ஆனால், சீசன் முடிந்ததும் பேக்கிங் செய்யப்பட்ட மாம்பழ ஜூஸை பிரியர்கள் வாங்கி சாப்பிடுவார்கள்.
ஆனால், இந்த ஜூஸ்கள் தரமான மற்றும் ஒரிஜினல் மாம்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றனவா என்று அனைவருக்கும் சந்தேகம் இருக்கும்.
இந்நிலையில், செயற்கையான முறையில் மாம்பழ ஜூஸ் தயாரிக்கப்பட்டு பேக்கேஜிங் செய்யப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
அதாவது இந்த வீடியோவானது மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் ஆலையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், "உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமிகளை, மாம்பழம் போன்ற மஞ்சள் நிறம் வரவழைக்கப்பட்டு செயற்கையான திரவத்தை கலக்கின்றனர்.
அதோடு, இனிப்பு சுவைக்காக சர்க்கரையையும் சேர்க்கின்றனர். கடைசியாக அதனை பிளாஸ்டிக் பேப்பர் பாக்கெட்டுகளில் அடைக்கின்றனர்" போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |