அமெரிக்கா டைம்ஸ் சதுக்கத்தில் பயங்கர வெடிப்பு.. உயிர் பயத்தில் தெறித்தோடிய மக்களின் வீடியோ
அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் பயங்கர வெடிப்பு சத்தம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நியூ யார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், சைரன் ஒலித்ததை தொடர்ந்து பயங்கர வெடிப்பு சத்தம் கேட்கிறது, இதையடுத்து பீதியில் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் தெறித்து ஓடியுள்ளனர்.
டைம்ஸ் சதுக்கத்தில் பகுதியில் இருந்த மேன்ஹோல்கள் பல வெடித்ததால் பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
கேபிள் பழுதால் ஒரு மேன்ஹோல் வெடித்ததாகவும், இரண்டாவது மேன்ஹோல் தீப்பிடித்ததாகவும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
ட்விட்டர் இறந்துகொண்டிருக்கிறது.. இதை செய்ய வேண்டும்: எலான் மஸ்க்
மொத்தம் மூன்று மேன்ஹோலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையின்ர் ஈடுபட்டதால், மேற்கு 43வது தெரு மற்றும் 7வது அவென்யூவைச் சுற்றியுள்ள பகுதி மூடப்பட்டது.
??BOLO for more of this coming in areas of the swamps… pray no one gets hurt!? NOW - Manhole explosion causes panic in New York's Times Square. pic.twitter.com/hPfeAS9x97
— Shocks_SS♎️⚖️ (@ss_shocks) April 11, 2022
மேன்ஹோல்கள் என்றால், தரைக்கு அடியில் உள்ள குழாய்கள், கம்பிகள் முதலியவற்றை ஆய்வு செய்வதற்காக ஆள் இறங்கக்கூடியவாறு தெருவில் அமைக்கப்பட்டுள்ள மூடியுடன் கூடிய துளை ஆகும்.
Huge bang in Times Square around 6:50… followed by sirens and hundreds of people running away. Not sure what it was… but a lot of people on edge! #NYC #TimesSquare pic.twitter.com/nhTtSbKe4S
— Brad Ball (@bdball) April 10, 2022
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள், வெடிப்பு சத்தம் கேட்டு பயந்துபோன சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் என்ன நடக்கிறது என தெரியாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடுவதை காட்டுகிறது.