நடிகையை ஏமாற்றி கருவை கலைத்த வழக்கு! அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
நடிகையை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி முன்னர் அளித்த புகாரில், மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி தன்னுடன் 5 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்தார்.
மேலும் தன்னை கருத்தரிக்க வைத்து பின்னர் கருவை கலைத்து அடித்து துன்புறுத்தினார் என புகைப்பட ஆதாரத்துடன் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து மணிகண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகையை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும் 2 வாரங்களுக்கு அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை முன்பு தினமும் ஆஜராக வேண்டும்.
பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.