மஞ்சு விரட்டில் நடந்த சோகம்.., காளை முட்டியதில் வீட்டு வாசலில் நின்ற இளைஞர் மரணம்
மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சு விரட்டு போட்டி
தமிழகத்தில் நேற்று மாட்டுப்பொங்கல் பெரு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் மாடுகளை அலங்கரித்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும் மாட்டுபொங்கல் கொண்டாடப்பட்டது.
மேலும், புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 3677 காளைகளும், 1412 மாடு பிடி வீரர்களும் ஒன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் வளையாங்குளம் பகுதியை அடுத்த எலியார்பாளையத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது.
இளைஞர் மரணம்
அப்போது, காளை அவிழ்த்து விடப்பட்ட நிகழ்வை வீட்டு வாசலில் நின்று ரமேஷ் என்ற இளைஞர் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சாலையில் வேகமாக ஓடிய காளை ஒன்று அப்படியே நின்றது.
பின்னர், சாலையில் வந்த லொறி அடித்த ஹாரன் சத்தத்தில் காளை மிரண்டு, வாசலில் நின்று கொண்டிருந்த ரமேஷை முட்டி தூக்கி வீசியது. இதில் ரமேஷின் இடது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறினர். இதில் ரமேஷுக்கு மூன்று வருடங்கள் முன்பு தான் திருமணம் ஆகி 1 வயது குழந்தை உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |