வெனிசுலா நிலநடுக்கம்... உயிரிழந்த வெளிநாட்டவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்
புதன்கிழமையன்று வெனிசுலா நாட்டை அடுத்தடுத்து இரண்டு பாரிய நிலநடுக்கங்கள் தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
235 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், சுமார் 1,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த வெளிநாட்டவர்கள்
இந்நிலையில், அந்த நிலநடுக்கத்தில் வெளிநாட்டவர்களும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

போர்ச்சுகல், ஸ்பெயின், பிரேசில், சீனா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ள நிலையில், பல்வேறு அரசாங்கங்கள் தங்கள் குடிமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறியும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
வெனிசுலா நிலநடுக்கத்தில், தன் நாட்டவர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், 56 பேரைக் காணவில்லை என்றும் போர்ச்சுகல் அரசு தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 90 பேரைக் காணவில்லை என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
மேலும், பிரேசில் நாட்டவர்களில் ஒரு தம்பதியும், சீனா நாட்டவர்கள் இருவரும், இத்தாலி - வெனிசுலா இரட்டைக் குடியுரிமை கொண்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |