போராடிய சொந்த நாட்டு மக்கள் மீதே கை வைத்த புடின்! தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண்கள்... வீடியோ
ரஷ்யாவில் புடினுக்கு எதிராக போராடிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று போர் தொடங்கிய நிலையில் ரஷ்யா உக்ரைனின் தலைநகர் கிவைவை நெருங்கி உள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீது புடின் தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து, பல ரஷ்ய ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் மக்கள் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்ய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட 56 நகரங்களில் அதிபர் புடினுக்கு எதிராக கோஷம் எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட ஏறக்குறைய 1,400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Thousands in Russia protest Ukraine war, hundreds detained.
— AFP News Agency (@AFP) February 25, 2022
Up to 1,000 people gathered in the former imperial capital Saint Petersburg, where many were detained by masked police officershttps://t.co/LUrkEES6z3 pic.twitter.com/bAYDoGeSjg
ஏற்கனவே 51 நகரங்களில் 1,391 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், எதிர்க்கட்சி பேரணிகளில் கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் அதிபருக்கு எதிராக போராடியதாக ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுள்ளது, அங்கு 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சுமார் 340 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டங்களில் ஈடுபடும் ரஷ்யர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிபர் புடின், உக்ரைனில் ரஷ்ய மக்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலைகளை தடுக்கவே ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
«To all the citizens of Russia who come out to protest, I want to say: we see you. This means that you heard us, you begin to believe us. Fight for us, fight against war» —
— soph ????? (@sophtrilogy) February 25, 2022
Vladimir Zelensky, president of Ukraine, to Russians.
?????#нетвойне #StopWar #StopRussianAggression pic.twitter.com/umUQTLnG3Q
Hundreds of people were arrested in more than 40 cities in Russia during protests against the war and against Vladimir Putin. pic.twitter.com/JizNCIZXaF
— brassygirl (@brassygirl_100) February 25, 2022