சுவிஸ் நகரங்களைவிட்டு வெளியேறும் வெளிநாட்டவர்கள் முதலான ஏராளம் மக்கள்: காரணம் என்ன?
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் உட்பட ஏராளமானோர் சுவிஸ் நகரங்களைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.
காரணம் என்ன?
ஒரு காலத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பதால் சுவிஸ் நகரங்களை நோக்கி படையெடுத்தார்கள் மக்கள். ஆனால், இப்போது எல்லாம் தலைகீழாக நடக்கிறது. ஆம், மக்கள் இப்போது நகரங்களைவிட்டு கிராமங்களுக்கு குடிபெயரத் துவங்கியுள்ளார்கள்.
அதற்குக் காரணம் என்னவென்றால், ஒன்று, நகரங்களில் வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது அத்துடன், வாடகையும் விண்ணைத்தொடும் அளவில் உள்ளது.
நகரத்தில் வாழும் அளவுக்கு நடுத்தர வர்க்கத்துக்கு வசதி இல்லை என்கிறார் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் Nicola Hilti என்பவர். குறிப்பாக சூரிச், Zug, ஜெனீவா மற்றும் பேஸல் நகரங்களில் இந்த நிலை காணப்படுகிறது என்கிறார் அவர்.
Photo by Tobias Tullius on Unsplash
சமீபத்தில் SonntagsZeitung என்னும் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று, சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வாழும் ஒரு மில்லியன் மக்கள், தங்கள் வருமானத்தை ஒப்பிடும்போது அதிக வாடகை செலுத்தவேண்டியுள்ளதால் அவதியுற்றுவருவதாக தெரிவிக்கிறது.
ஆக, வீடுகள் கிடைப்பதில் பிரச்சினை உள்ளதுடன், வாடகையும் விண்ணைத்தொடும் அளவில் உள்ளதால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் நகரங்களைவிட்டு (இப்போதைக்கு), சற்று குறைவான வாடகையில் வீடு கிடைக்கும் கிராமங்களை நோக்கி படையெடுத்துவருகிறார்கள்.