தன் உடல்நிலை குறித்து இறப்பதற்கு சில நாட்கள் முன் தலையில் கட்டுடன் மரடோனா பேசிய வீடியோ வெளியானது!
மறைந்த அர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் மரடோனா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தலையில் கட்டுடன் பேசிய வீடியோவை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.
நவம்பர் 2020-ல் மரடோனா மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் மரடோனாவுக்கு இரத்த உறைவை அகற்ற மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மரடோனா மறைந்து மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், தற்போதும் மரடோனா மரணம் தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது.
இந்நிலையில், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் மரடோனா பேசிய வீடியோவை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.
?? Sale a la luz el último vídeo de
— El Chiringuito TV (@elchiringuitotv) February 3, 2021
Diego Armando Maradona con vida.
? Crónica tv pic.twitter.com/XkaNC6PLkD
அதில், மூளை அறுவை சிகிச்சைக்கு பின் தலையில் கட்டுடன் சமையல் அறையில் அமர்ந்திருக்கும் மரடோனா, தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் Leopoldo Luque-யிடம் உரையாற்றுகிறார்.
தான் நலமாக இருப்பதாக கூறும் மரடோனா, நெருக்கமான தருணங்களை நான் விரும்பவில்லை என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் நான் நல்ல மனிதர்களுடன் இருக்கும்போது எனக்குளிருந்து வெளியே வருகிறேன் என கூறுகிறார்.
மரடோனா மரணத்திற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் Leopoldo Luque தான் காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், சிகிச்சையில் எந்தவித தவறும் நடக்கவில்லை என குற்றச்சாட்டை மருத்துவர் Leopoldo Luque மறுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022