குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான மரவள்ளிக்கிழங்கு போண்டா.., எப்படி செய்வது?
மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது.
அந்தவகையில், சத்துக்கள் நிறைந்த மரவள்ளிக்கிழங்கில் சுவையான போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மரவள்ளிக்கிழங்கு- 1
- வெங்காயம்- 2
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- கொத்தமல்லி- சிறிதளவு
- முந்திரி- 10
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தயிர்- 400ml
- ரவை- 50g
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் மரவள்ளிக்கிழங்கு உப்பு சேர்த்து 3 விசில் விட்டு வேகவைத்து துருவி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, முந்திரி, பெருங்காயம், உப்பு, தயிர் மற்றும் ரவை சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து இதனை 15 நிமிடம் மூடிபோட்டு அப்படியே வைக்கவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மாவை உருண்டையாக போட்டு பொரிக்கவும்.
இறுதியாக நன்கு பொன்னிறமாக வந்ததும் எடுத்தால் சுவையான மரவள்ளிக்கிழங்கு போண்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |