ஒரு இளம் தம்பதி குறித்து வெளியான செய்தி... பரவும் வதந்திகள்: ஜேர்மனியில் பரபரப்பு
ஜேர்மனியில் ரயிலில் பயணித்த ஒரு இளம் தம்பதி திடீரென நோய்வாய்ப்பட்டதாகவும், உடனடியாக இரண்டு மார்க்கங்களில் செல்லும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ருவாண்டாவில் பரவிவரும் வைரஸ் தொற்று
ருவாண்டா நாட்டில் Marburg வைரஸ் என்னும் வைரஸ் தொற்று பரவிவருகிறது. அந்த தொற்றுக்கு 12 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 29 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ருவாண்டா அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன், தொற்று பாதித்தவர்களுடன் சுமார் 400 பேர் தொடர்பிலிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
?Hashyizweho Ingamba zo kwirinda no guhangana n'indwara y'umuriro mwinshi iterwa na virusi ya Marburg
— Ministry of Health | Rwanda (@RwandaHealth) September 27, 2024
----
Enhanced preventive measures implemented for viral fever? pic.twitter.com/RonMVKYsyE
பரவும் வதந்திகளால் ஜேர்மனியில் பரபரப்பு
இந்நிலையில், ருவாண்டாவுக்கு சென்று திரும்பிய ஜேர்மன் மருத்துவ மாணவர் ஒருவரும், அவரது காதலியும் பிராங்பர்ட்டிலிருந்து ஹாம்பர்க் நகருக்கு ரயில் பயணிக்கும்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக, இரண்டு மார்க்கங்களில் செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மார்பர்க் வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்தாலும், அந்த மாணவர் தொடர்ந்து 21 நாட்களுக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளார்,
இதற்கிடையில், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜேர்மனியில் மார்பர்க் வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.
மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், தசை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகளுடன், சிலருக்கு கடுமையான இரத்த இழப்பு காரணமாக மரணமும் நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |