PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மார்ச் 15 கடைசி தேதி
ELI திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள தொழிலாளர்கள் தங்களது UAN- ஐ செயல்படுத்தி ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும் செயல்முறைக்கு மார்ச் 15 ஆம் திகதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 15 கடைசி தேதி
வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள், தங்கள் PF கணக்கை எளிதாக நிர்வகிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக, வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்திலிருந்து பயனடைய உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கும், வங்கி கணக்குகளை ஆதார் உடன் இணைப்பதற்கும் 15.02.2025 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த காலக்கெடு 15.03.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கணக்கு எண் (UAN) என்பது ஒரு EPFO இன் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தனித்துவமான மற்றும் நிரந்தர 12 இலக்க எண்ணாகும். இந்த UNA ஒரு பணியாளரின் வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ELI திட்டம்
வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Employment Linked Incentive- ELI) திட்டத்தில் பலன் அடைவதற்கு UAN-ஐ Activate செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ELI திட்டத்தைஅறிமுகப்படுத்தினார்.
ELI திட்டம் என்பது 2 ஆண்டுகளில் 20 மில்லியன் வேலைகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் A, B மற்றும் C என 3 வகைகள் உள்ளது.
இதில் முதல் முறை EPF உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உற்பத்தியில் வேலைவாய்ப்பு உருவாக்கம் வகை B இன் கீழ் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குவது வகை C இன் கீழ் காணப்படுகிறது.
UAN Activate செய்வது எப்படி?
முதலில் epfindia.gov.in இல் உள்ள EPFO இணையதளத்திற்கு சென்று, “For Employees” என்பதை தேர்வு செய்து, “Member UAN Online Service OCS OTCP” என்பதைத் தேர்ந்தேடுக்க வேண்டும்.
அதன் பின்னர் 'Activate UAN' என்பதை Click செய்து, UAN எண், ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகிய தகவல்களை உள்ளிட்ட வேண்டும்.
அதன் பின்னர் 'Get Authorization PIN' என்பதை தேர்வு செய்தால், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ உள்ளிட்ட பின்னர் UAN செயல்படுத்தப்படும்.
KYC விவரங்களை இணைக்க
EPF ள் உள்நுழைந்த பின்னர், KYC என்பதை தேர்ந்தெடுத்து (PAN, வங்கிக் கணக்கு, ஆதார்) போன்ற தகவல்களை வழங்கிய பின்னர் Save என்பதை கிளிக் செய்யவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |