இனி PF பணத்தை நேரடியாக ATM-ல் எடுக்கலாம்.., எப்போது இருந்து தெரியுமா?
EPFO உறுப்பினர்கள் ஏடிஎம்மில் (ATM) இருந்து PF பணத்தை எடுக்கும் வசதியைப் பெறுவார்கள் என்ற தகவல் வந்துள்ளது.
PF பணம்
நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வருங்கால வைப்பு நிதியாக பிடிக்கப்படும்.
தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொகையை நிறுவனமும் செலுத்தும். இதற்கு இந்திய அரசு வட்டியை வழங்கும்.
இதனால், பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்கும். அதேபோல, வேலை செய்து கொண்டிருக்கும்போதே அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்றால் இணைய தளம் மூலம் பதிவு செய்து பணத்தை எடுக்கலாம்.
இந்நிலையில், EPFO உறுப்பினர்கள் அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டிலிருந்து ஏடிஎம்மில் இருந்து PF பணத்தை எடுக்கலாம் என்றும், மென்பொருள் மேம்படுத்தப்படும் என்றும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் வட்டி.., Post Office -ன் முக்கியமான திட்டம் பற்றி தெரியுமா?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமித்ரா தவ்ரா கூறுகையில், “எங்கள் பிஎஃப் வழங்கல் ஐடி அமைப்பை நாங்கள் மேலும் மேம்படுத்தி வருகிறோம். PF இன் கீழ் தேவையற்ற செயல்முறைகள் நீக்கப்பட்டுள்ளது.
EPFO -ன் IT உள்கட்டமைப்பை வங்கி முறையின் அதே நிலைக்கு கொண்டு வருவதே எங்கள் லட்சியம். ஜனவரி 2025 -ல் பெரிய மேம்பாடுகளை நீங்கள் காண்பீர்கள். அப்போது EPFO -ல் IT 2.1 பதிப்பு இருக்கும். அப்போது, நீங்கள் எளிதாக பணத்தை பெற முடியும்.
உரிமைகோரல் தீர்வை எளிமையாக்க எங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்பை மேம்படுத்துகிறோம்" என்றார். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் செயலில் உள்ள பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை 7 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட பின்னர் பணத்தை எடுப்பதற்கான கார்டு வழங்கப்படும். இது வங்கி கார்டை போன்று இருக்கும். இருப்பினும், மொத்த டெபாசிட் தொகையில் 50% திரும்பப் பெறும் வரம்பு இருக்கும்.
மேலும், பணத்தை எடுக்கும் முறையில் மாற்றம் ஏதும் இல்லை. நீங்கள் வேலையில் இருக்கும் போது PF நிதியை பகுதி அல்லது முழுமையாக திரும்பப் பெற உங்களுக்கு அனுமதி இல்லை.
குறைந்தது நீங்கள் ஒரு மாதமாவது வேலையில்லாமல் இருந்தால், உங்கள் PF இருப்பில் 75% வரை நீங்கள் திரும்பப் பெறலாம்.
இரண்டு மாத வேலையின்மைக்குப் பிறகு, முழுத் தொகையையும் திரும்பப் பெற நீங்கள் தகுதி பெறுவீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |