28 பந்துகளில் 78 ரன்! சிக்ஸர்மழை பொழிந்து வெஸ்ட் இண்டீசை அலறவிட்ட வீரர்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்க் சாப்மேன் 78 ஓட்டங்கள் விளாசினார்.
மார்க் சாப்மேன் ருத்ர தாண்டவம்
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஈடன் கார்டனில் நடந்து வருகிறது. 
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் துடுப்பாடியது.
கான்வே 16 ஓட்டங்களிலும், ராபின்சன் 39 ஓட்டங்கள் விளாசியும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரவீந்திரா 11 ஓட்டங்களில் வெளியேற, மார்க் சாப்மேன் ருத்ர தாண்டவம் ஆடினார்.
19 பந்துகளில் அரைசதம் அடித்த சாப்மேன், 28 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் விளாசினார். 
பின்னர் வந்த டேர்ல் மிட்சேல் (Daryl Mitchell) 14 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் விளாச, நியூசிலாந்து அணி 207 ஓட்டங்கள் குவித்தது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |